Wednesday, June 10, 2009

ராஜ பக்‌ஷேக்கு மணியாட்டும் மேனன். . .

அதிபர் ராஜபக்சே என்ன முடிவெடுத்தாலும் அதை இந்தியா உறுதியுடன் ஆதரிக்கும் என்று கூறியுள்ளார் வெளியுறவுத் துறை செயலாளர் மேனன்.
அது மட்டும் இல்லாமல்,இலங்கை தமிழர் பிரச்சனை என்பது அந்நாட்டின் உள் நாட்டு பிரச்சனை,அதில் நார்வே நாடோ,இந்தியாவோ தலையிட முடியாது, இலங்கைக்கு நல்லது எது என்பதை பிறர் சொல்லத் தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.
அவர் இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளரா. . .? இல்லை, ராஜ பக்‌ஷேவின் கொள்கை பரப்பு செயலாளரா. . .?
வெவ்வேறு மொழி பேசும் இங்கிலாந்து மாதிரி நாட்டுக்காரன் எல்லாம் இலங்கை அதிபர் மேல ஐ.நா.-ல குற்றம் சாட்டுறான்.ஆனா ஒரே நாட்டுல பொறந்து வாழ்ந்த நம்ம தமிழன் அங்க சாவுறத பாத்த பின்னாடியும் இப்படி பேசி ஈனத் தனமா வாழத் தான் வேண்டுமா,மேனன். . .?
அத்தோட,”தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 2 பேர் டெல்லி வந்துள்ளதாக அறிகிறேன். அவர்கள் அவ்வப்போது இங்கு வந்து டெல்லியில் உள்ள பல்வேறு தலைவர்களுடன் பேசிக் கொண்டுதான் உள்ளனர். இருப்பினும் பிரதமரை சந்திக்க அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பதை உறுதியாக கூறுகிறேன்.

இவர்களது வருகையால் இலங்கை அரசுத் தரப்பில் எந்தவித பீதியும் அடையத் தேவையில்லை”,அப்படின்னு வேற பேசி இருக்கார்.
இத பத்தி எல்லாம் எழுதி உங்க,என்னோட நேரத்த வீணடிக்க விரும்பல.

ஆனா இப்படி எல்லாம் பேசினால் தான் அது மாதிரி உயர் பதவியில இருக்கலாம்-னா அதுக்கு பதிலா பிச்சை எடுத்து வாழலாம்.

Friday, April 10, 2009

ஈழத்தின் சோகக் காட்சிகள். . .

கீழ் காணும் புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்ப வில்லை.

ஆனாலும் இலங்கையில் தமிழர்களுக்கு நடந்து வரும் கொடுமைகளைப் பற்றி எனக்கு வந்த ஈ-மெயில் படங்களை,அங்கு நடக்கும் கொடுமையை காட்சியுடன் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

தயவு செய்து இதய பலவீனமானவர்கள் தவிர்க்கவும்.


பாதுகாக்கப்பட்ட பகுதி
என அறிவிக்கப்பட்ட இடத்தில். . .








கடந்த மாதம் நடந்த மருத்துவமனை கொடுமை . . .





இந்த குழந்தை செய்த பாவம் என்ன. . .?




இந்த குழந்தை தமிழ் பேசியது மட்டுமே அது செய்த பாவம்.

இதற்கு காரணமானவர்கள் என்ன சொல்கிறார்கள். . .?

இந்த புகைப்படங்களை எந்த ஒரு இந்திய ஊடகமும்,ஏன் உலக ஊடகமும்

பிரசுரிக்க வில்லை என்பதே வருத்தமான விஷயம்.

ஜனவரி 2009-மூங்கிலாறு,ஸ்ரீலங்கா என்ற இடத்தில் நடத்திய
சண்டையில் பாதிக்கப் பட்ட பொது மக்கள். . .




தலையின்றி இறந்த 13 வயது பள்ளி மாணவன். . .





ஒரு கர்பிணித் தாயின் நிலை. . .



கடந்த 01-ஜனவரி-2009 முதல் 30-மார்ச்-2009 வரை..............................

3812 அப்பாவி இலங்கைத் தமிழர்கள் 900 குழந்தைகள் உட்பட இலங்கை

இராணுவத்தால் கொல்லப்பட்டு உள்ளார்கள்.

US அறிக்கை படி,ஒவ்வொரு நாளும் 42 அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்.

ஆனால் அந்த அரசு,உலக அரங்கத்தை தனது நாட்டின் உள்ளே விட மறுக்கிறது.


இந்த கொடுமைக்கெல்லாம் காரணமானவர்களுக்கு நம்மால் படிப்பினை தர முடியாவிட்டாலும்,இதற்கு துணை போன,துணை போய் கொண்டு இருக்கும் இந்த காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு நம்மால் பாடம் புகட்ட முடியும்.

சிந்தித்து செயல் படுவோம் மனிதர்களே. . .

புக்கர் பரிசு பெற்ற அருந்ததி ராய் அவர்களின் கருத்து. . .

http://timesofindia.indiatimes.com/articleshow/4331986.cms

Saturday, February 21, 2009

இலங்கைத் தமிழர் பற்றி பேச வேண்டுமா. . .?அரசியல் கட்சி ஆரம்பியுங்கள்.

யார் இலங்கைத் தமிழர் பற்றி பேசினாலும் எங்கே இந்திய இந்திய இறையாண்மை அது இது வென சொல்லி உள்ள அனுப்பிடுவாங்களோன்னு பயப்பட வேண்டி இருக்கு.
அமீர்,சீமான்-னு உணர்ச்சிவயப்பட்டு இலங்கைத் தமிழர்களுக்காகப் பேசி உள்ளே போனவர்கள் உண்டு.
ஆனால் திருமாவளவன்,வைகோ என இன்றும் இலங்கைத் தமிழர்களுக்கும்,விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவாக பேசி,அதே நேரத்தில் சுதந்திரமாகத் தானே அந்த அரசியல் தலைவர்கள் வலம் வருகின்றனர்.
அவர்களையும் கைது செய்ய வேண்டுமா. . .?வேண்டாமா. . .? என்பதை ஆராய்வதல்ல,நமது இப்போதைய நோக்கம்.
ஒரு சாராருக்கு உள்ளதாகக் கருதப்படும் கருத்து சுதந்திரம்,ஏன் நம் நாட்டில் அனைவருக்கும் இல்லை. . .?
சீமான் பேசிய போது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என பேசிய அந்த கரைவேட்டிகள்,நேற்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கப் பொதுக் கூட்டத்தில்,
“இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசு தொடர்ந்து அடக்கு முறைகளை கையாண்டால்,விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஆயுதம் ஏந்தவும் தயாராவோம்”(வைகோ-வின் பேச்சை படிக்க...)
--என வைகோ பேசினாரே,அப்போது எங்கே போனார்கள். . .?
அப்போது கொந்தளித்த காங்கிரஸ் கரைவேட்டிகளும்,அவர்களுக்கு ஒத்துப்போன தி.மு.க அரசும் வைகோ-வின் இந்த பேச்சுக்கு என்ன பதில் சொல்ல போகிரார்கள் . . .?
ஒரு வேளை சீமானும் அரசியல் கட்சி ஆரம்பித்து விட்டால்,எங்கே கைது செய்தால் கூட்டணி வைக்க முடியாமல் போய் விடுமோ என நினைத்து அப்போது தான் கைது செய்ய மாட்டார்களோ என்னவோ,இந்த கபடதாரிகள்.
எனவே,மக்களே. . .இலங்கைத் தமிழர் பற்றி பேச வேண்டுமா. . .?அரசியல் கட்சி ஆரம்பியுங்கள்.

Monday, January 26, 2009

நாய்க்கு போடும் ரொட்டித் துண்டல்ல. . மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை. . .

முதல்ல இந்த அரசியல்வா(வியா)திகள் அரசாங்கம் என்றால் என்ன. . .? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மக்களால் மக்களுக்காக மக்களைக் கொண்டு அமைக்கப் பட்ட அமைப்பே அரசாங்கம்.அந்த அமைப்பு முறை பொருளாதாரரீதியாக வீ ழாமல் இருக்க மட்டுமே பொருட்களின் விலை ஏற்றம்.மற்ற படி மக்களுக்கு தன் பவரை காட்ட அல்ல அரசு.
சர்வதேச கச்சா எண்ணெய்,பேரல் ஒன்றுக்கு 50 டாலருக்கு கீழே குறைந்த பின்னும் இன்னும் அதற்கு தக்க அளவு பெட்ரோல்,டீசல் விலையை குறைக்காமல் அவ்வப்போது அது பற்றிய பேச்சை மட்டுமே பேசி வருகிறார்,முரளி தியோரா.
அகில இந்திய மோட்டார் காங்கிரஸின் வேலை நிறுத்தத்தின் போது பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க ஒத்துக் கொண்டார்,தியோரா.
அதற்கு பின் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அது பற்றி பேச வில்லை என ப.சிதம்பரம் கூறுகிறார்.
மீண்டும் மோட்டார் காங்கிரஸின் போராட்ட அறிவிப்புக்குப் பின் மீண்டும் பெட்ரோல்,டீசல் விலையை குறைக்கப் போகிறாராம்,தியோரா.
ஆனால் இப்ப இல்லையாம். . .அதாவதுங்க,பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு பற்றி எழுத்துப் பூர்வமான முடிவு எடுக்கப்பட்டு விட்டதாம்.ஆனால் அறிவிப்பு தேதி இன்னும் முடிவு செய்ய வில்லையாம்.ஒருவேளை அஷ்டமி,நவமி பாக்குறாரோ,அமைச்சர். . . .?
என்ன பைத்தியக்காரத்தனம் இது. . .?
சிலர்,நாய்க்கு பிஸ்கட் போட பாசாங்கு செய்வதைப் போல நம்மிடமும் பாசாங்கு செய்கிறாரா,தியோரா. . .?
நீங்கள் எங்களுக்கு ரொட்டித் துண்டு போட போவது போல பாசாங்கு செய்ய நாங்கள் ஒண்ணும் நாய்கள் இல்லை. . .
அரசாங்கத்தை நடத்துபவர்கள் மக்கள் தலைவர்கள் அல்ல. . .அந்த மக்களுக்கு வேலைக்காரர்கள்.

சுருக்கமா சொன்னா நீங்க எங்களின் சேவகர்கள். அதை புரிந்து கொள்ள வேண்டும். . .
விலையை குறைக்க வேண்டியது உங்கள் கடமை.
விலை குறைப்பை முடிவு செய்து விட்டதாகவும் ஆனால் அறிவிப்பு தேதியை மட்டும் முடிவு செய்ய வில்லை எனவும் கூறுவது சின்ன புள்ளைங்க விளையாட்டு போலல்ல இருக்கு. . .
இப்படி பாசாங்கு பேசுபவரை எல்லாம் தேர்ந்து எடுத்த அந்த மக்களுக்கு இதுவும் வேணும்,இதுக்கு மேலவும் வேணும். . .
அப்புறம் . . .பாத்துங்க தியோரா. . .நீங்க விலை குறைப்புக்கு பாசாங்கு செய்றா மாதிரி மக்களும் ஓட்டு போடுறா மாதிரி பாசாங்கு பண்ணி கவுத்துட போறாங்க. . .



Tuesday, January 13, 2009

பொங்கட்டும் வாழ்வில் இன்பம். . .

--
செவ்வானம்.

Thursday, January 8, 2009

கோடிக்கணக்கில் திருடுங்கள்; எளிதில் தப்பிக்கலாம்--இந்தியாவில் மட்டும். . .

சத்யம் கம்பியூட்டர்ஸ் முன்னாள் தலைவர் இராமலிங்க ராஜு சுமார் 7000 கோடி ரூபாய் அள்வுக்கு கையாடல் செய்தது நாம் அறிந்த விஷயமாகி விட்டது.
இந்த நேரத்தில் அந்த திருடர் (கோடிக்கணக்கில் ஊழல்,அதான் மரியாதை),இப்ப எங்கன்னு தெரியலையாம்.அவர் தலை மறைவு என காவல் துறை கூறி உள்ளது.
இது சம்மந்தமாக சில கேள்விகள் எழுகின்றன,ஆனால் பதில் தான் கிடைக்க வில்லை.
ஆயிரம் ரூபாய் ஊழல் செய்யும் சாமானியனை உள்ளே விட்டு உதைக்கும் காவல் துறை கோடிக்கணக்கில் ஊழல் செய்த அதையும் மீடியா முன்பு பட்டவர்த்தனமாக ஒத்துக்கொண்ட அவரை ஏன் கைது செய்ய வில்லை...?
சாமானியனிடம் தன் வீரத்தை காட்டும் காவல் துறை இப்போது தயங்குவது ஏன்....?
அப்படியானால்,இந்த ஊழலில் வேறு யார்யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது.....?
இல்லாத கையிருப்பாக பல கோடி ரூபாய் பணத்தை சில காலாண்டு முடிவுகளில் ராஜு காட்டியுள்ளார்.அதை ஆடிட் செய்த நிறுவனம் கண்டு பிடிக்க வில்லையா...?இல்லை கண்டு கொள்ள வில்லையா...?
ஊழல் குற்றம் வெளியிடப்பட்ட போது சத்யம் கம்யூட்டர்ஸ் பங்கு விலை சரசரவென சரியத் தொடங்கியது.அதற்கு பெரும்பாலான காரணம் F&O வணிகமே.Atleast அதை SEBI அன்று தடை செய்து இருந்தாலே சிறு முதலீட்டார்கள் அந்த அளவு பாதிக்க பட்டு இருக்க மாட்டார்கள்.அதை SEBI செய்யாதது ஏன். . .?
இதை எல்லாம் பார்க்கும் போது தப்பு செய்தது ராமலிங்க ராஜு மட்டும் அல்ல,நேரிடையாகவும் மறைமுகமாகவும் அதில் பலருக்கு தொடர்பு உள்ளதாகவே தெரிகிறது.
ஆகவே,இந்திய மக்களே நீங்களும் தப்பு செய்யுங்கள்,ஆனால் கோடிக்கணக்கில். . . . . .


Wednesday, December 31, 2008

தயவு செஞ்சி மன்னிச்சுக்கங்க--ஒரு பாவ மன்னிப்பு......


ஹாய்,

என் பெயர் ..................

மன்னிச்சுக்கங்க...

என் பேரு உங்களுக்கு தெரியும்...

நான் உங்களுக்கு ஏதாவது கெட்டது செஞ்சிருந்தா,என்னை மன்னிச்சுக்கங்க.....

நான் என் கடைசி காலத்த எண்ணிக்கிட்டு இருக்கேன்...... :(

நான் இனிமே உங்க வாழ்க்கையில குறுக்கிட மாட்டேன்........

என்னை பத்தி யாரும் கவலை படாதீங்க.........

உங்க கூடவே இருக்க ஆசை தான்.........

ஆனா என்ன செய்யிறது............

குட் பை.........

இப்படிக்கு,
2008.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.