Saturday, February 21, 2009

இலங்கைத் தமிழர் பற்றி பேச வேண்டுமா. . .?அரசியல் கட்சி ஆரம்பியுங்கள்.

யார் இலங்கைத் தமிழர் பற்றி பேசினாலும் எங்கே இந்திய இந்திய இறையாண்மை அது இது வென சொல்லி உள்ள அனுப்பிடுவாங்களோன்னு பயப்பட வேண்டி இருக்கு.
அமீர்,சீமான்-னு உணர்ச்சிவயப்பட்டு இலங்கைத் தமிழர்களுக்காகப் பேசி உள்ளே போனவர்கள் உண்டு.
ஆனால் திருமாவளவன்,வைகோ என இன்றும் இலங்கைத் தமிழர்களுக்கும்,விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவாக பேசி,அதே நேரத்தில் சுதந்திரமாகத் தானே அந்த அரசியல் தலைவர்கள் வலம் வருகின்றனர்.
அவர்களையும் கைது செய்ய வேண்டுமா. . .?வேண்டாமா. . .? என்பதை ஆராய்வதல்ல,நமது இப்போதைய நோக்கம்.
ஒரு சாராருக்கு உள்ளதாகக் கருதப்படும் கருத்து சுதந்திரம்,ஏன் நம் நாட்டில் அனைவருக்கும் இல்லை. . .?
சீமான் பேசிய போது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என பேசிய அந்த கரைவேட்டிகள்,நேற்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கப் பொதுக் கூட்டத்தில்,
“இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசு தொடர்ந்து அடக்கு முறைகளை கையாண்டால்,விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஆயுதம் ஏந்தவும் தயாராவோம்”(வைகோ-வின் பேச்சை படிக்க...)
--என வைகோ பேசினாரே,அப்போது எங்கே போனார்கள். . .?
அப்போது கொந்தளித்த காங்கிரஸ் கரைவேட்டிகளும்,அவர்களுக்கு ஒத்துப்போன தி.மு.க அரசும் வைகோ-வின் இந்த பேச்சுக்கு என்ன பதில் சொல்ல போகிரார்கள் . . .?
ஒரு வேளை சீமானும் அரசியல் கட்சி ஆரம்பித்து விட்டால்,எங்கே கைது செய்தால் கூட்டணி வைக்க முடியாமல் போய் விடுமோ என நினைத்து அப்போது தான் கைது செய்ய மாட்டார்களோ என்னவோ,இந்த கபடதாரிகள்.
எனவே,மக்களே. . .இலங்கைத் தமிழர் பற்றி பேச வேண்டுமா. . .?அரசியல் கட்சி ஆரம்பியுங்கள்.