Tuesday, December 9, 2008

மும்பைத் தாக்குதல்-ராகுல் காந்தியின் விருந்து;காங்கிரசின் சப்பைக்கட்டு

மும்பையில் தீவிரவாதிகலோடு கமாண்டோ படையினர் சண்டையிட்ட நேரத்தில் ராகுல் காந்தி ஒரு பெரிய விருந்தில் கலந்து கொண்டது பற்றி காங்கிரஸ் முக்கியத் தலைவர் திக் விஜய் சிங் மற்றும் செய்தி தொடர்பாள்ர் ஜெயந்தி நடராஜன் ஓர் சப்பைக்கட்டு போட்டுள்ளனர்.
அது பற்றிய ஓர் உண்மைத் தொண்டனின் உள்ளக் குமுறல்.
முன்பே ஒப்புக்கொண்ட விழா-ங்குறதால் தான் போனார்னு சொல்றீங்களே திக் விஜய் சிங்,ஏனுங்கய்யா அந்த ஓட்டல்ல சோனியா அம்மையார் இருந்திருந்தா ராகுல் காந்தி விருந்துக்கு போயிருப்பாங்களா...?
ஒரு தேசிய கட்சியின் பொதுச்செயளாளர்,ஒரு தேசிய பாதுகாப்பு பிரச்சனை நடைபெறும் போது விருந்துக்கு போனது சரினு சொல்லுறீங்களா...?இத்தனைக்கும் அவரு ஒரு எம்.பி வேற.
துல ஜெயந்தி நடராஜன் வேற தன் பங்குக்கு ஆவர்தனம் பாடுறாரு.
மும்பை விவகாரத்தில் செய்ய வேண்டிய வேலையை சொல்லிய பிறகு தான் அவர் விருந்தில் கலந்து கொண்டாருன்னு சொல்லுறீங்களே..
ஏன் அம்மையாரே,நம்ம வீட்ல ஒரு எழவு நடந்துட்டா வெட்டியானுக்கும் வெறகுக்கும் சொல்லி செய்ய வேண்டிய வேலைய சொல்லிபுட்டு விருந்துக்கு போவோமா...?
கொஞ்சம் யோசிச்சு பேசுங்கம்மா.
நம்ம ஊர்ல அன்னைக்கு அடிதட்டு மக்கள்கூட, பாவிப்பயலுவ என்னமா சுடுரானுங்க,நம்ம வீரருங்க இத்தன பேர பலி குடுத்துட்டமேன்ற அதிர்ச்சியில சில வேள சாப்புடல.
ஆனா ராகுலு நீங்க.......?
தனி மனிதனுக்கு உடையில்லன்ன உடனே தன்னோட ஆடைய துறந்த காந்தி அய்யாவோட கட்சியில இருக்கீங்க.யோசிச்சி நடந்துக்கங்க ராசா.
இன்னும் இந்த கெழவன் வேற யென்ன சொல்லப்போறேன்.......
யேங்க கட்சியில இருக்குறவங்க யாராவது கட்சி வரலாறு பத்தின புத்தகத்த நம்ம ராகுலுக்கு குடுக்கக் கூடாதா...?
---இப்படிக்கு காந்தியும் காமராஜரும் மறுபடியும் பொறந்து வந்து நாட்ட காப்பாத்துவாங்கன்னு நம்பிக்கிட்டு இருக்குற வயசான கதர் சட்டைக்காரன்.
நன்றி வணக்கமுங்க.

5 comments:

  1. ஆரம்பமே அமர்க்களமா இருக்கு. தொடருங்கள்.

    ReplyDelete
  2. பாலா,
    தங்கள் வருகை & விமர்சனத்திற்கு நன்றி.மீண்டும் வருக.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. வயசான கதர் சட்டை காரரா.. நம்பவே முடியலை... தலைவர்களோட நிரல் என்றால் சும்மாவா..

    கதர் சட்டை என்று சொல்லிடீங்க.. அப்போ இன்னும் கூட காரம் சேர்த்திருக்கலாமே..

    இது எல்லாம் இருக்க்கட்டும், காந்திய என்னிக்கு கதர் சட்டை கூட்டத்துல சேர்த்தீங்க...

    ReplyDelete
  5. சிம்பா,
    1921-ல இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் அவர் தானே.
    ம்ம்ம்ம்...அவர் பின்னோடிகள் கட்சிய இப்படி ஆக்கிட்டாங்க.

    உங்க கவலை புரியுது.ஆனா யென்ன செய்யுறது...

    (இன்னிமே இன்னும் காரத்த தாராளமா எதிர் பாருங்க...)

    ReplyDelete