Wednesday, June 10, 2009

ராஜ பக்‌ஷேக்கு மணியாட்டும் மேனன். . .

அதிபர் ராஜபக்சே என்ன முடிவெடுத்தாலும் அதை இந்தியா உறுதியுடன் ஆதரிக்கும் என்று கூறியுள்ளார் வெளியுறவுத் துறை செயலாளர் மேனன்.
அது மட்டும் இல்லாமல்,இலங்கை தமிழர் பிரச்சனை என்பது அந்நாட்டின் உள் நாட்டு பிரச்சனை,அதில் நார்வே நாடோ,இந்தியாவோ தலையிட முடியாது, இலங்கைக்கு நல்லது எது என்பதை பிறர் சொல்லத் தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.
அவர் இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளரா. . .? இல்லை, ராஜ பக்‌ஷேவின் கொள்கை பரப்பு செயலாளரா. . .?
வெவ்வேறு மொழி பேசும் இங்கிலாந்து மாதிரி நாட்டுக்காரன் எல்லாம் இலங்கை அதிபர் மேல ஐ.நா.-ல குற்றம் சாட்டுறான்.ஆனா ஒரே நாட்டுல பொறந்து வாழ்ந்த நம்ம தமிழன் அங்க சாவுறத பாத்த பின்னாடியும் இப்படி பேசி ஈனத் தனமா வாழத் தான் வேண்டுமா,மேனன். . .?
அத்தோட,”தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 2 பேர் டெல்லி வந்துள்ளதாக அறிகிறேன். அவர்கள் அவ்வப்போது இங்கு வந்து டெல்லியில் உள்ள பல்வேறு தலைவர்களுடன் பேசிக் கொண்டுதான் உள்ளனர். இருப்பினும் பிரதமரை சந்திக்க அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பதை உறுதியாக கூறுகிறேன்.

இவர்களது வருகையால் இலங்கை அரசுத் தரப்பில் எந்தவித பீதியும் அடையத் தேவையில்லை”,அப்படின்னு வேற பேசி இருக்கார்.
இத பத்தி எல்லாம் எழுதி உங்க,என்னோட நேரத்த வீணடிக்க விரும்பல.

ஆனா இப்படி எல்லாம் பேசினால் தான் அது மாதிரி உயர் பதவியில இருக்கலாம்-னா அதுக்கு பதிலா பிச்சை எடுத்து வாழலாம்.