Wednesday, December 31, 2008

தயவு செஞ்சி மன்னிச்சுக்கங்க--ஒரு பாவ மன்னிப்பு......


ஹாய்,

என் பெயர் ..................

மன்னிச்சுக்கங்க...

என் பேரு உங்களுக்கு தெரியும்...

நான் உங்களுக்கு ஏதாவது கெட்டது செஞ்சிருந்தா,என்னை மன்னிச்சுக்கங்க.....

நான் என் கடைசி காலத்த எண்ணிக்கிட்டு இருக்கேன்...... :(

நான் இனிமே உங்க வாழ்க்கையில குறுக்கிட மாட்டேன்........

என்னை பத்தி யாரும் கவலை படாதீங்க.........

உங்க கூடவே இருக்க ஆசை தான்.........

ஆனா என்ன செய்யிறது............

குட் பை.........

இப்படிக்கு,
2008.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Saturday, December 20, 2008

ராமனடிமை வைக்கிறார் மாணவர்களுக்கு ஆப்பு...

ஹா. . . . . ஹா . . . .ஹா. . . . என்ன இது? ஆரம்பமே சிரிப்பா இருக்குதுன்னு பாக்குறீங்களா..அதான் இந்த அரசியல்வாதிகளால நம்ம வாழ்க்கையேதான் சிரிப்பா சிரிக்குதே.......
Latest சிரிப்பு, நம்ம மாணவர்கள் மேல மருத்துவர் அய்யா ராமனடிமைக்கு வந்த ”குபீர்” பாசம் தாங்க. . .
அதாவதுங்க,தமிழ் இசைய பள்ளியில ஒரு பாடமா வச்சி அதுல 100 மார்க்குக்கு பரிட்சை வேற வைக்கணுமாம்.
அவனவன் உள்ளத படிச்சாலே வேல கெடக்க மாட்டேங்குது.இதுல புதுசா தமிழ் இசைய வேற படிக்கணுமாம்.அவன் அத படிச்சா என்ன வேலைக்கு போவான். . . .?
தமிழ், தமிழ்-னு பேசுற நம்ம அரசியல்வாதிகளுக்கு தமிழன் மட்டும் வாழக்கூடாது.தமிழ், தமிழ்-னு கத்தி கூப்பாடு போடற இவங்க முதல்ல இவங்க வூட்டு புள்ளைகள தமிழ் மீடியத்துல் படிக்க வைப்பாங்களா . . . ?அன்புமணி புள்ள Delhi CBSE school-ல படிக்குது.
இந்தியை திணிக்கக் கூடாதுன்னு சொல்லி சொல்லியே இந்தியை படிக்க வுடல.இப்போதைய இரண்டாம் தலைமுறையான நம்மல தலையெடுக்கவும் வுடல. . .தமிழ்நாட்டுக்கு வெளியில வடநாட்டு பக்கம் மொழி தெரியாததால வேலை பாக்கவும் துப்பு இல்லாமலும் போச்சு. . . ஏதோ English-அ வச்சி அங்க பொழப்பு ஓடுது. . . .
இப்ப தமிழ், தமிழ்-னு சொல்லி சொல்லியெ அதுக்கும் வேட்டு வைக்க பாக்குறாங்களாக்கும். . .
எதை சொன்னாலும் முதல்ல உங்களுக்கு apply பண்ணி பாருங்க. . .நல்லாயிருந்தா மத்தவங்களுக்கு சொல்லுங்க. . .
மருத்துவர் அய்யா முதல்ல இதுமாதிரி உளறுறத நிறுத்துங்க.ஆனா இது உளறல் இல்ல,ராஜதந்திரம்னு எங்களுக்கு தெரியும்.
நாங்க படிச்சு வேலைக்கு போகாம இருந்தா தானே உங்கள மாதிரி ஆளுங்களையும்,உங்க வாரிசுகளையும் பல்லக்குல தூக்க முடியும்.நாங்க படிச்சுபுட்டா நாலு கேள்வி கேப்போம்,நீங்களும் பதில் சொல்லணும். . .இதெல்லாம் தேவையானு நீங்க நெனைக்கிறது புரியுது. . .
என்னமோ போங்க. . .
நாங்க தான் நல்லா இல்ல,
நீங்களாவது நல்லா இருங்க. . .


Tuesday, December 9, 2008

மும்பைத் தாக்குதல்-ராகுல் காந்தியின் விருந்து;காங்கிரசின் சப்பைக்கட்டு

மும்பையில் தீவிரவாதிகலோடு கமாண்டோ படையினர் சண்டையிட்ட நேரத்தில் ராகுல் காந்தி ஒரு பெரிய விருந்தில் கலந்து கொண்டது பற்றி காங்கிரஸ் முக்கியத் தலைவர் திக் விஜய் சிங் மற்றும் செய்தி தொடர்பாள்ர் ஜெயந்தி நடராஜன் ஓர் சப்பைக்கட்டு போட்டுள்ளனர்.
அது பற்றிய ஓர் உண்மைத் தொண்டனின் உள்ளக் குமுறல்.
முன்பே ஒப்புக்கொண்ட விழா-ங்குறதால் தான் போனார்னு சொல்றீங்களே திக் விஜய் சிங்,ஏனுங்கய்யா அந்த ஓட்டல்ல சோனியா அம்மையார் இருந்திருந்தா ராகுல் காந்தி விருந்துக்கு போயிருப்பாங்களா...?
ஒரு தேசிய கட்சியின் பொதுச்செயளாளர்,ஒரு தேசிய பாதுகாப்பு பிரச்சனை நடைபெறும் போது விருந்துக்கு போனது சரினு சொல்லுறீங்களா...?இத்தனைக்கும் அவரு ஒரு எம்.பி வேற.
துல ஜெயந்தி நடராஜன் வேற தன் பங்குக்கு ஆவர்தனம் பாடுறாரு.
மும்பை விவகாரத்தில் செய்ய வேண்டிய வேலையை சொல்லிய பிறகு தான் அவர் விருந்தில் கலந்து கொண்டாருன்னு சொல்லுறீங்களே..
ஏன் அம்மையாரே,நம்ம வீட்ல ஒரு எழவு நடந்துட்டா வெட்டியானுக்கும் வெறகுக்கும் சொல்லி செய்ய வேண்டிய வேலைய சொல்லிபுட்டு விருந்துக்கு போவோமா...?
கொஞ்சம் யோசிச்சு பேசுங்கம்மா.
நம்ம ஊர்ல அன்னைக்கு அடிதட்டு மக்கள்கூட, பாவிப்பயலுவ என்னமா சுடுரானுங்க,நம்ம வீரருங்க இத்தன பேர பலி குடுத்துட்டமேன்ற அதிர்ச்சியில சில வேள சாப்புடல.
ஆனா ராகுலு நீங்க.......?
தனி மனிதனுக்கு உடையில்லன்ன உடனே தன்னோட ஆடைய துறந்த காந்தி அய்யாவோட கட்சியில இருக்கீங்க.யோசிச்சி நடந்துக்கங்க ராசா.
இன்னும் இந்த கெழவன் வேற யென்ன சொல்லப்போறேன்.......
யேங்க கட்சியில இருக்குறவங்க யாராவது கட்சி வரலாறு பத்தின புத்தகத்த நம்ம ராகுலுக்கு குடுக்கக் கூடாதா...?
---இப்படிக்கு காந்தியும் காமராஜரும் மறுபடியும் பொறந்து வந்து நாட்ட காப்பாத்துவாங்கன்னு நம்பிக்கிட்டு இருக்குற வயசான கதர் சட்டைக்காரன்.
நன்றி வணக்கமுங்க.

Saturday, December 6, 2008

கேட்பது உரிமை,பிச்சையில்லை...

பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க வேண்டும் என பிரதமரிடமும் பெட்ரோலிய அமைச்சரிடமும் நாட்டு மக்கள் அனைவரும் கேட்கிறோம்.ஆனால் பெட்ரோலிய நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ளன என காரணம் கூறி விலைக்குறைப்பை தள்ளி வைத்தனர்.ஆனால் தற்போது பெட்ரோலுக்கு 5 ரூபாயும்,டீசலுக்கு 2 ரூபாயும் குறைத்துள்ளனர்.
நம்ம விலை குறைப்பு எதிர்பார்ப்பே வேற...
காரணத்த இங்க அலசுவோம்.
1 பேரல் கச்சா எண்ணெய்யின் சர்வதேச விலை தற்போது 43 டாலர்கள் அளவில் வர்த்தகம் ஆகிறது.நம் நாட்டிலேயே எடுக்கப்படும் கச்சா எண்ணெய்க்கு ஆகும் செலவு 1 பேரலுக்கு 55 டாலர்கள்.இந்தியாவில் 75% கச்சா எண்ணெய் இறக்குமதி ஆகிறது.அதாவது மொத்தம் 4 பேரல் என்றால் 3 பேரல்கள் வெளிநாட்டிலிருந்து வருபவை.
அப்படியானால் 4 பேரலுக்கு ஆகும் செலவு....
3 x 43 டாலர்=129 டாலர்கள்.

1 X 55 டாலர்= 55 டாலர்கள்.

மொத்தம்(129 + 55) 184 டாலர்கள்.

1 பேரலின் விலை (184/4) =46 டாலர்கள்.

ரூபாய் எனில், (1 டாலர்=50 ரூபாய்)

46 X50 ரூபாய்= 2300 ரூபாய்கள்.

1 பேரல் என்பது 158.987 லிட்டர்கள்.

159 லிட்டர் எனக் கொள்வோம்.

1 பேரல்(159 லி.)-ன் விலை ரூ 2300.

அப்ப,1 லிட்டரின் விலை ரூ 2300/159=ரூ14.47

இது தான் 1லிட்டர் கச்சா எண்ணெய் விலை.

இதை சுத்திகரிக்க 1 லிட்டருக்கு 20 பைசாவிலிருந்து 1 ரூபாய் வரை ஆகலாம். எப்படி பார்த்தாலும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலின் விலை ரூ15.50-ஐ தாண்டாது.

ஆனால் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ 50.50.

அப்புறம் எப்படி நஷ்டம்........?
காதுல பூ வைக்கலாம்.ஆனால் இப்படி பூமாலையை வைக்கக் கூடாது.அம்பானிகளுக்கு விசுவாசமாக இருப்பதால் தான் என்றால்,அவர்களது குடும்ப ஓட்டுகள் 1000-ஐ தாண்டுமா?
யோசிங்க ஆட்சியாளர்களே..........

நீங்க பணவீக்கத்த கொறைக்க, பெட்ரோல்,டீசல் விலைய கொறைங்க.மத்த விலை எல்லாம் தானெ கொறையும்..........
டெயில்பீஸ்:இது என் கன்னிப் பதிவு.