Monday, January 26, 2009

நாய்க்கு போடும் ரொட்டித் துண்டல்ல. . மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை. . .

முதல்ல இந்த அரசியல்வா(வியா)திகள் அரசாங்கம் என்றால் என்ன. . .? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மக்களால் மக்களுக்காக மக்களைக் கொண்டு அமைக்கப் பட்ட அமைப்பே அரசாங்கம்.அந்த அமைப்பு முறை பொருளாதாரரீதியாக வீ ழாமல் இருக்க மட்டுமே பொருட்களின் விலை ஏற்றம்.மற்ற படி மக்களுக்கு தன் பவரை காட்ட அல்ல அரசு.
சர்வதேச கச்சா எண்ணெய்,பேரல் ஒன்றுக்கு 50 டாலருக்கு கீழே குறைந்த பின்னும் இன்னும் அதற்கு தக்க அளவு பெட்ரோல்,டீசல் விலையை குறைக்காமல் அவ்வப்போது அது பற்றிய பேச்சை மட்டுமே பேசி வருகிறார்,முரளி தியோரா.
அகில இந்திய மோட்டார் காங்கிரஸின் வேலை நிறுத்தத்தின் போது பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க ஒத்துக் கொண்டார்,தியோரா.
அதற்கு பின் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அது பற்றி பேச வில்லை என ப.சிதம்பரம் கூறுகிறார்.
மீண்டும் மோட்டார் காங்கிரஸின் போராட்ட அறிவிப்புக்குப் பின் மீண்டும் பெட்ரோல்,டீசல் விலையை குறைக்கப் போகிறாராம்,தியோரா.
ஆனால் இப்ப இல்லையாம். . .அதாவதுங்க,பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு பற்றி எழுத்துப் பூர்வமான முடிவு எடுக்கப்பட்டு விட்டதாம்.ஆனால் அறிவிப்பு தேதி இன்னும் முடிவு செய்ய வில்லையாம்.ஒருவேளை அஷ்டமி,நவமி பாக்குறாரோ,அமைச்சர். . . .?
என்ன பைத்தியக்காரத்தனம் இது. . .?
சிலர்,நாய்க்கு பிஸ்கட் போட பாசாங்கு செய்வதைப் போல நம்மிடமும் பாசாங்கு செய்கிறாரா,தியோரா. . .?
நீங்கள் எங்களுக்கு ரொட்டித் துண்டு போட போவது போல பாசாங்கு செய்ய நாங்கள் ஒண்ணும் நாய்கள் இல்லை. . .
அரசாங்கத்தை நடத்துபவர்கள் மக்கள் தலைவர்கள் அல்ல. . .அந்த மக்களுக்கு வேலைக்காரர்கள்.

சுருக்கமா சொன்னா நீங்க எங்களின் சேவகர்கள். அதை புரிந்து கொள்ள வேண்டும். . .
விலையை குறைக்க வேண்டியது உங்கள் கடமை.
விலை குறைப்பை முடிவு செய்து விட்டதாகவும் ஆனால் அறிவிப்பு தேதியை மட்டும் முடிவு செய்ய வில்லை எனவும் கூறுவது சின்ன புள்ளைங்க விளையாட்டு போலல்ல இருக்கு. . .
இப்படி பாசாங்கு பேசுபவரை எல்லாம் தேர்ந்து எடுத்த அந்த மக்களுக்கு இதுவும் வேணும்,இதுக்கு மேலவும் வேணும். . .
அப்புறம் . . .பாத்துங்க தியோரா. . .நீங்க விலை குறைப்புக்கு பாசாங்கு செய்றா மாதிரி மக்களும் ஓட்டு போடுறா மாதிரி பாசாங்கு பண்ணி கவுத்துட போறாங்க. . .



Tuesday, January 13, 2009

பொங்கட்டும் வாழ்வில் இன்பம். . .

--
செவ்வானம்.

Thursday, January 8, 2009

கோடிக்கணக்கில் திருடுங்கள்; எளிதில் தப்பிக்கலாம்--இந்தியாவில் மட்டும். . .

சத்யம் கம்பியூட்டர்ஸ் முன்னாள் தலைவர் இராமலிங்க ராஜு சுமார் 7000 கோடி ரூபாய் அள்வுக்கு கையாடல் செய்தது நாம் அறிந்த விஷயமாகி விட்டது.
இந்த நேரத்தில் அந்த திருடர் (கோடிக்கணக்கில் ஊழல்,அதான் மரியாதை),இப்ப எங்கன்னு தெரியலையாம்.அவர் தலை மறைவு என காவல் துறை கூறி உள்ளது.
இது சம்மந்தமாக சில கேள்விகள் எழுகின்றன,ஆனால் பதில் தான் கிடைக்க வில்லை.
ஆயிரம் ரூபாய் ஊழல் செய்யும் சாமானியனை உள்ளே விட்டு உதைக்கும் காவல் துறை கோடிக்கணக்கில் ஊழல் செய்த அதையும் மீடியா முன்பு பட்டவர்த்தனமாக ஒத்துக்கொண்ட அவரை ஏன் கைது செய்ய வில்லை...?
சாமானியனிடம் தன் வீரத்தை காட்டும் காவல் துறை இப்போது தயங்குவது ஏன்....?
அப்படியானால்,இந்த ஊழலில் வேறு யார்யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது.....?
இல்லாத கையிருப்பாக பல கோடி ரூபாய் பணத்தை சில காலாண்டு முடிவுகளில் ராஜு காட்டியுள்ளார்.அதை ஆடிட் செய்த நிறுவனம் கண்டு பிடிக்க வில்லையா...?இல்லை கண்டு கொள்ள வில்லையா...?
ஊழல் குற்றம் வெளியிடப்பட்ட போது சத்யம் கம்யூட்டர்ஸ் பங்கு விலை சரசரவென சரியத் தொடங்கியது.அதற்கு பெரும்பாலான காரணம் F&O வணிகமே.Atleast அதை SEBI அன்று தடை செய்து இருந்தாலே சிறு முதலீட்டார்கள் அந்த அளவு பாதிக்க பட்டு இருக்க மாட்டார்கள்.அதை SEBI செய்யாதது ஏன். . .?
இதை எல்லாம் பார்க்கும் போது தப்பு செய்தது ராமலிங்க ராஜு மட்டும் அல்ல,நேரிடையாகவும் மறைமுகமாகவும் அதில் பலருக்கு தொடர்பு உள்ளதாகவே தெரிகிறது.
ஆகவே,இந்திய மக்களே நீங்களும் தப்பு செய்யுங்கள்,ஆனால் கோடிக்கணக்கில். . . . . .