Saturday, December 6, 2008

கேட்பது உரிமை,பிச்சையில்லை...

பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க வேண்டும் என பிரதமரிடமும் பெட்ரோலிய அமைச்சரிடமும் நாட்டு மக்கள் அனைவரும் கேட்கிறோம்.ஆனால் பெட்ரோலிய நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ளன என காரணம் கூறி விலைக்குறைப்பை தள்ளி வைத்தனர்.ஆனால் தற்போது பெட்ரோலுக்கு 5 ரூபாயும்,டீசலுக்கு 2 ரூபாயும் குறைத்துள்ளனர்.
நம்ம விலை குறைப்பு எதிர்பார்ப்பே வேற...
காரணத்த இங்க அலசுவோம்.
1 பேரல் கச்சா எண்ணெய்யின் சர்வதேச விலை தற்போது 43 டாலர்கள் அளவில் வர்த்தகம் ஆகிறது.நம் நாட்டிலேயே எடுக்கப்படும் கச்சா எண்ணெய்க்கு ஆகும் செலவு 1 பேரலுக்கு 55 டாலர்கள்.இந்தியாவில் 75% கச்சா எண்ணெய் இறக்குமதி ஆகிறது.அதாவது மொத்தம் 4 பேரல் என்றால் 3 பேரல்கள் வெளிநாட்டிலிருந்து வருபவை.
அப்படியானால் 4 பேரலுக்கு ஆகும் செலவு....
3 x 43 டாலர்=129 டாலர்கள்.

1 X 55 டாலர்= 55 டாலர்கள்.

மொத்தம்(129 + 55) 184 டாலர்கள்.

1 பேரலின் விலை (184/4) =46 டாலர்கள்.

ரூபாய் எனில், (1 டாலர்=50 ரூபாய்)

46 X50 ரூபாய்= 2300 ரூபாய்கள்.

1 பேரல் என்பது 158.987 லிட்டர்கள்.

159 லிட்டர் எனக் கொள்வோம்.

1 பேரல்(159 லி.)-ன் விலை ரூ 2300.

அப்ப,1 லிட்டரின் விலை ரூ 2300/159=ரூ14.47

இது தான் 1லிட்டர் கச்சா எண்ணெய் விலை.

இதை சுத்திகரிக்க 1 லிட்டருக்கு 20 பைசாவிலிருந்து 1 ரூபாய் வரை ஆகலாம். எப்படி பார்த்தாலும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலின் விலை ரூ15.50-ஐ தாண்டாது.

ஆனால் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ 50.50.

அப்புறம் எப்படி நஷ்டம்........?
காதுல பூ வைக்கலாம்.ஆனால் இப்படி பூமாலையை வைக்கக் கூடாது.அம்பானிகளுக்கு விசுவாசமாக இருப்பதால் தான் என்றால்,அவர்களது குடும்ப ஓட்டுகள் 1000-ஐ தாண்டுமா?
யோசிங்க ஆட்சியாளர்களே..........

நீங்க பணவீக்கத்த கொறைக்க, பெட்ரோல்,டீசல் விலைய கொறைங்க.மத்த விலை எல்லாம் தானெ கொறையும்..........
டெயில்பீஸ்:இது என் கன்னிப் பதிவு.

7 comments:

  1. கன்னிப்பதிவே அசத்தல் பதிவா போட்டுடீங்க டீச்சர்...

    நானும் எதுனா ஆட்சியாளர்களை குறை சொல்லும் பதிவா இருக்கும் என்று நினைத்தேன்.. ஆனா புள்ளிவிவர கணக்கு குடுத்து அசத்திடீங்க.. கண்டிப்பா இந்த பதிவு இன்னும் அதிகமான வாசகர்களுக்கு சென்றடைய வேண்டும்..

    மேலும் word verification பகுதியினை நீக்கி விடவும்...

    ReplyDelete
  2. சிம்பா,இந்த ப்ளக்கை ஆரம்பித்ததில் உங்கள் பங்கு மிக அதிகம்.
    நன்றி...

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. நண்பரே !நானும் ஒரு blog ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்.எப்படி ஆரம்பிப்பது என்று விளக்க முடியுமா?இது என் ஈமெயில் முகவரி.
    ram_28888@yahoo.com

    ReplyDelete
  5. Sri,
    முதல்ல Google a/c ஒன்னு ஆரம்பீங்க.அப்றம் www.blogger.com பாருங்க.அந்த site உங்களுக்கு வழிகாட்டும்.
    தங்கள் வருகைக்கு நன்றி & வாழ்த்துக்கள்.

    ReplyDelete