Thursday, January 8, 2009

கோடிக்கணக்கில் திருடுங்கள்; எளிதில் தப்பிக்கலாம்--இந்தியாவில் மட்டும். . .

சத்யம் கம்பியூட்டர்ஸ் முன்னாள் தலைவர் இராமலிங்க ராஜு சுமார் 7000 கோடி ரூபாய் அள்வுக்கு கையாடல் செய்தது நாம் அறிந்த விஷயமாகி விட்டது.
இந்த நேரத்தில் அந்த திருடர் (கோடிக்கணக்கில் ஊழல்,அதான் மரியாதை),இப்ப எங்கன்னு தெரியலையாம்.அவர் தலை மறைவு என காவல் துறை கூறி உள்ளது.
இது சம்மந்தமாக சில கேள்விகள் எழுகின்றன,ஆனால் பதில் தான் கிடைக்க வில்லை.
ஆயிரம் ரூபாய் ஊழல் செய்யும் சாமானியனை உள்ளே விட்டு உதைக்கும் காவல் துறை கோடிக்கணக்கில் ஊழல் செய்த அதையும் மீடியா முன்பு பட்டவர்த்தனமாக ஒத்துக்கொண்ட அவரை ஏன் கைது செய்ய வில்லை...?
சாமானியனிடம் தன் வீரத்தை காட்டும் காவல் துறை இப்போது தயங்குவது ஏன்....?
அப்படியானால்,இந்த ஊழலில் வேறு யார்யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது.....?
இல்லாத கையிருப்பாக பல கோடி ரூபாய் பணத்தை சில காலாண்டு முடிவுகளில் ராஜு காட்டியுள்ளார்.அதை ஆடிட் செய்த நிறுவனம் கண்டு பிடிக்க வில்லையா...?இல்லை கண்டு கொள்ள வில்லையா...?
ஊழல் குற்றம் வெளியிடப்பட்ட போது சத்யம் கம்யூட்டர்ஸ் பங்கு விலை சரசரவென சரியத் தொடங்கியது.அதற்கு பெரும்பாலான காரணம் F&O வணிகமே.Atleast அதை SEBI அன்று தடை செய்து இருந்தாலே சிறு முதலீட்டார்கள் அந்த அளவு பாதிக்க பட்டு இருக்க மாட்டார்கள்.அதை SEBI செய்யாதது ஏன். . .?
இதை எல்லாம் பார்க்கும் போது தப்பு செய்தது ராமலிங்க ராஜு மட்டும் அல்ல,நேரிடையாகவும் மறைமுகமாகவும் அதில் பலருக்கு தொடர்பு உள்ளதாகவே தெரிகிறது.
ஆகவே,இந்திய மக்களே நீங்களும் தப்பு செய்யுங்கள்,ஆனால் கோடிக்கணக்கில். . . . . .


4 comments:

  1. வணக்கம் டீச்சர்...

    இன்று முழுவதும் பக்கத்தில் உள்ள ஒரு நிறுவனத்தின் புண்ணியத்தால், காலை முதல் மாலை வரை மின்சாரம் இல்லை...

    ஆகையால் சத்யம் நிறுவனத்தில் நடந்ததை முழுவதுமாக படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது... அதில் தென்பட்ட ஒரு சில விஷயங்கள் எனக்கு தலை சுற்ற வைத்தது..

    முதலில் அந்நிறுவனத்தில் சுரண்டப்பட்ட பணம் சுமார் 8000 கோடி...இது கடந்த 1999 ஆண்டு முதல் தொடர் கதையாக நடந்துள்ளது..

    மய்டஸ் நிறுவனத்தில் மூலம் இந்தியாவில் உள்ள நிலங்களை வாங்கி குவித்த சத்யம் சிறுவனம் இந்திய நாட்டின் முதல் பத்து land lord இல் ஒன்றாக உள்ளது.. சுமார் 6400 ஏக்கர் நிலம் உள்ளது.. அதற்காக அந்நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு அளித்த, இன்னும் கொடுத்துக்கொண்டிருக்கிற பணம் மிகவும் அதிகம்...

    இதையெல்லாம் தாண்டி மய்டஸ் நிறுவனம் பல விருதுகளை குவித்துள்ளது.. இந்த வருடம் ஏற்ப்பட்ட பொருளாதா சரிவு மய்டஸ் நிறுவனத்தை பாதித்துள்ளது..

    அதற்காக சத்யம் நிறுவனம், அதன் பங்குகளை, மய்டஸ் நிறுவனத்தை காப்பாற்ற அடமானம் வைத்துள்ளது... இப்பொழுது நிலைமை மிகவும் மோசமான காரணத்தால் இப்படி ஒரு முடிவை ராசு எடுத்துள்ளார்...

    ReplyDelete
  2. அருண்,
    சத்யம் கம்ப்யூட்டர் பற்றிய மேலும் பல தகிதத்தங்களை அறிந்து கொள்ள...
    நம் நண்பர்களின்,
    http://selvaspeaking.blogspot.com/2009/01/blog-post_09.html
    http://guhankatturai.blogspot.com/2009/01/blog-post_07.html
    வலை தளங்களை பாருங்கள்...

    ReplyDelete
  3. விரைவில் துவங்க உள்ள நெல்லைத்தமிழ் இணையத்தின் திரட்டியில் இணையலாமே...
    சோதனை திரட்டியில் உங்கள் இடுகையை பதிய...
    http://india.nellaitamil.com/

    ReplyDelete
  4. இப்படியுமா நடக்குது சரி சரி
    நல்லா எழுதிறீங்க தொடர்ந்து எழுதுங்க http
    nallurran-nallur.blogspot.com

    ReplyDelete